உலக செய்திகள்

பாகிஸ்தானில் சம்பவம்: பொம்மை வெடிகுண்டு வெடித்து 3 குழந்தைகள் பலி + "||" + Incident in Pakistan: Toy bomb blast kills 3 children

பாகிஸ்தானில் சம்பவம்: பொம்மை வெடிகுண்டு வெடித்து 3 குழந்தைகள் பலி

பாகிஸ்தானில் சம்பவம்:  பொம்மை வெடிகுண்டு வெடித்து 3 குழந்தைகள் பலி
பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.


கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் சிலர் தங்களது வீடு அருகே விளையாடி கொண்டிருந்து உள்ளனர்.

இந்நிலையில், பொம்மை போன்ற பொருள் ஒன்று வீட்டினருகே கிடந்துள்ளது.  இதனை அந்த குழந்தைகள் எடுத்து விளையாடியுள்ளனர்.  ஆனால், பொம்மை போன்று இருந்தது வெடிகுண்டு ஆகும்.  இது தெரியாமல் குழந்தைகள் விளையாடியுள்னர்.

இதில், அந்த பொம்மை வெடிகுண்டு திடீரன வெடித்துள்ளது.  இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்கள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  எனினும், இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 20 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.