மாநில செய்திகள்

ஜூலை:3- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை + "||" + No change in petrol diesel price on saturday

ஜூலை:3- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை

ஜூலை:3- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரொல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
சென்னை,

பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முந்தைய காலங்களில் அவற்றின் விலையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.

அதன்படி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான அளவு மானியங்களை வழங்கி பெட்ரோல், டீசல் விலை உயராத வண்ணம் பார்த்துக் கொண்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஏற்றி, இறக்கி வந்தது. இது மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்து வந்தது.

இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது. அது நாள் முதல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு  வருகிறது. 

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. டீசல் விலையும் சில இடங்களில் சதம் அடித்துள்ளது. தமிழகத்திலும் நேற்று வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை 100-ஐ தாண்டி வாகன ஓட்டிகளை அதிரவைத்தது. 

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 100.13 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்துள்ளது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் மாட்டு வண்டியில் காரை ஏற்றி ஊர்வலமாக வந்தனர்.