தேசிய செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு + "||" + Covaxin Overall 77.8% Effective, Claims Bharat Biotech In Phase 3 Data

கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு

கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு
கொரோனா அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த தடுப்பூசியாது கொரோனா பாதிப்பு அதிகம்  ஏற்படாமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது. 

 130 கொரோனா நோயாளிகளிடம் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தி முடித்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதில்  கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில்
கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.
2. சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, செப்டம்பரில் ஆய்வு முடிவு- எய்ம்ஸ் இயக்குநர் தகவல்
சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் கிடைக்க்கும் என எதிர்பார்ப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
3. கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் 4-6 வாரங்களில் முடிவு- உலக சுகாதார அமைப்பு
கோவேச்கின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து 4-6 வாரங்களில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
4. தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி
கோவிஷீல்டு, கோவேக்சின் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாவிடில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இந்திய வருபவர்களுக்கு கட்டாய தனிமை நடைமுறை பின்பற்றப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.
5. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அரசு அவசர கால அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக பொதுமக்களுக்கு செலுத்த பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.