மாநில செய்திகள்

பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம் ;கோவை விமான நிலையத்தில் பிடிபட்டது + "||" + 7 kg of gold smuggled in paste form seized at Coimbatore airport

பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம் ;கோவை விமான நிலையத்தில் பிடிபட்டது

பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம் ;கோவை விமான நிலையத்தில் பிடிபட்டது
சமீபகாலமாக கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

கோவை

ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராகிம்ஷா ஆகிய ஆறு பேரிடம் இருந்து 7 கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 ஆறு பேரும் கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், வேலூர், திட்டக்குடி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.

அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைபற்றபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.