மாநில செய்திகள்

கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் + "||" + Don't think covid 19 second wave is over - health secretary

கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை

சென்னையில் இன்று  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-  ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமின்றி செயல்படக் கூடாது. 
கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா  உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை. டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. 12 ஆம் தேதிக்குள் 15 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
வரும் 12-ம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா தொற்று பாதிப்பு அடுத்த 2 வாரங்கள் சவாலானவை; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
வளசரவாக்கம் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.