தேசிய செய்திகள்

செல்போனை பறித்து தொழிலாளியை சாலையில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் + "||" + Bike-borne mobile phone snatchers drag migrant worker on road in Kerala

செல்போனை பறித்து தொழிலாளியை சாலையில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்

செல்போனை பறித்து தொழிலாளியை சாலையில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்
கேரளாவில் புலம் பெயர்ந்த தொழிலாளியை சாலையில் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் தமராசேரி தாலுகாவில் பீகாரை சேர்ந்த  அலி அக்பர் என்பவர்  வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று 2  நபர்கள்  அலி அக்பரை அணுகி அவசரமாக பேச வேண்டும் என கூறி அவரது மொபைலை வாங்கி உள்ளனர். பின்னர் மொபைலை எடுத்துக்கொண்டு பைக் ஒன்றில்  கிளம்பினர். உடனடியாக அலி அக்பர்  மோட்டார் சைக்கிளின் கேரியரை பிடித்து கொண்டார். இருந்தாலும்  மோட்டார் சைக்கிளில்  avarai சிறிது தூரம் ரோட்டில் இழுத்து சென்ற கொள்ளையர்கள்  தப்பி விட்டனர.

ரோட்டில் இழுத்து செல்லபட்டத்தில் காயமடைந்த அலி அக்பர், தமராசேரி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். 

இதுகுறித்த புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போன் கொள்ளையர்களை  கண்டு பிடித்து கைது செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சானு கிருஷ்ணன் மற்றும் ஷம்னாஸ் அப்துரகிமான் என அடையாளம் தெரியவந்து உள்ளது. இருவரும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்.