மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் + "||" + GK Vasan says to continue alliance with AIADMK in local body elections

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன்
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை

சட்டசபை தேர்தலில்  அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 6  தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்து இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் சட்டசபைதேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ஆழ்வார்பேட்டையில் நிருபர்களை  தமிழ்மாநில  காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வரும் 8ஆம் தேதி முதல்  11 டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன்.  அ.தி.மு.க .கூட்டணி வெற்றிக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். 

தி.மு.க. ஆட்சி தொடங்கி 1 மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும் .  நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையூறாக த.மா.கா. இருக்காது.

மத்திய அரசு என்பதைத்தான்  தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். சொல் எதுவாக இருந்தாலும் மத்திய அரசின் பலத்தை அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ளது. அதை மாற்ற முடியாது, மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என்றும் வாசன் அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
2. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
3. உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி, அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவு
உத்தர பிரதேச உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
4. உள்ளாட்சி தேர்தல்: மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் - செல்லூர் ராஜூ நம்பிக்கை
உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்று செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக பணிகளை முடிப்பதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.