தேசிய செய்திகள்

மோடியுடன் தமிழக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு மக்கள் பணியை சிறப்பாக செய்ய அறிவுரை + "||" + Bharatiya Janata Party MLAs from Tamil Nadu met Prime Minister Narendra Modi at 7, LKM today

மோடியுடன் தமிழக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு மக்கள் பணியை சிறப்பாக செய்ய அறிவுரை

மோடியுடன் தமிழக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு மக்கள் பணியை சிறப்பாக செய்ய அறிவுரை
பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்தத்தார்.மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவியது. ஆனால் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்துக்குள் பா.ஜனதா நுழைந்துள்ளது.

பிரதிநிதித்துவமே இல்லாத தமிழகத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தடம் பதித்தது தேசிய அளவில் தலைவர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

அதேபோல் புதுவையிலும் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் பா.ஜனதா வென்றது. முதல்முறையாக அந்த மாநில மந்திரிசபையிலும் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

அதேபோல தமிழக எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் மோடியிடம் வாழ்த்து பெறுவதற்காக இன்று டெல்லி சென்றுள்ளனர். 4 எம்.எல்.ஏ.க்களில் வானதி சீனிவாசன் நட்சத்திர வேட்பாளரான நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எம்.ஆர்.காந்தி நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வின் பலமான வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து போட்டியிட்டு டாக்டர் சரஸ்வதி வென்றார்.

நெல்லை தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வென்றார்.

4 எம்.எல்.ஏ.க்களும் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த முறை தமிழக சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து கூறிவந்த மாநில தலைவர் எல்.முருகன், நம்பிக்கை வீண்போகவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் மோடி எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ‘மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள், அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.

மதியம் 1 மணி அளவில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை 4 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர்.
2. பிரதமர் மோடியுடன் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
பிரதமர் மோடியை சந்தித்தபின்பு இருவரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.
3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று திடீரென தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர்.
4. கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.
5. மன் கி பாத் நிகழ்ச்சி; பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரை
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.