தேசிய செய்திகள்

அமேசான், கூகுள் நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தல்- ரிசர்வ் வங்கி + "||" + Big Tech Push Into India's Financial Sector Raises Concerns for Traditional Banks, RBI Says

அமேசான், கூகுள் நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தல்- ரிசர்வ் வங்கி

அமேசான், கூகுள் நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தல்- ரிசர்வ் வங்கி
அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
 
நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சில்லறை வணிகத்தில் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், தகவல்களை பாதுகாப்பது, இணைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்றவற்றில், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்த நிறுவனங்களின் திட்டங்கள், நிதி சார்ந்த விதிகளை வகுப்போருக்கு சவால் அளிக்கிறது. 

நமது நாட்டில் அமேசான், கூகுள் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சில்லறை வணிகத்திற்கான பண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான அனுமதியைப் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த கருத்தை தெரிவித்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் வந்த புகார்களை தொடர்ந்து கடந்த மாதம் கூகுள் 59,000 உள்ளடக்கங்களை நீக்கியது
இந்திய பயனர்களின் புகார்களை தொடர்ந்து கடந்த மாதம் கூகுள் 59,000 உள்ளடக்கங்களை நீக்கி உள்ளதாக கூறி உள்ளது
2. கன்னட கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடை விற்பனை செய்து வரும் அமேசான் நிறுவனம்
கன்னட மக்களின் கொடி மற்றும் கர்நாடக அரசு முத்திரை பதித்த நீச்சல் உடையை கனடாவில் உள்ள அமேசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்
'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
4. பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது- ரிசர்வ் வங்கி
இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
5. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 2-வது திருமணம்; அறிவியல் ஆசிரியரை கரம் பிடித்தார்
உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ். அமேசானை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சி ஸ்காட்டை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.