மாநில செய்திகள்

மேகதாது அணை திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை; முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் + "||" + Edyurappa's letter to chief-Minister Stalin

மேகதாது அணை திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை; முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

மேகதாது அணை திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை; முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்
மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுகிறதா என ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தது. 

ஆனால், மேகதாது ஆய்வுக்குழு தொடர்பான இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

மேகதாது ஆய்வுக்குழு தொடர்பான இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அப்போது, கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டது. அத்துடன், முறையான அனுமதியின்றி மேகதாது பகுதியில் எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. 

இந்தநிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.