தேசிய செய்திகள்

இரு தவணை தடுப்பூசியை செலுத்துக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 % தற்காத்துக்கொள்ள முடியும் + "||" + 2 doses of Covid vaccine provide 98 per cent protection from death, says Govt, citing Punjab study

இரு தவணை தடுப்பூசியை செலுத்துக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 % தற்காத்துக்கொள்ள முடியும்

இரு தவணை தடுப்பூசியை செலுத்துக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 % தற்காத்துக்கொள்ள முடியும்
இரு தவணை தடுப்பூசியையும் செலுத்துக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் தற்காத்துக்கொள்ள முடியும் என நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறினார்.
புதுடெல்லி

நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பஞ்சாப் அரசுடன் இணைந்து முதுகலை மருத்துக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (பிஜிஐஎம்இஆர்) நடத்திய ஆய்வில், கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக்கொண்டவர்கள் தொற்று பாதிப்பின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து குறைந்தது 98 சதவீதம் தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது.

எளிமையான இந்த ஆய்வுல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 4,868 போலீசாரில்  15 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதாவது 1000 பேருக்கு 3.08 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 35,856 பேர்களில் 9 பேர் மட்டுமே தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1000-க்கு 0.25 பேர் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 42,720 போலீசாரில்  2 பேர் மட்டுமே தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதாவது 1000-க்கு 0.05 பேருக்கு மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து 92 சதவீதம் தற்காப்பும், இரு தவணை தடுப்பூசியையும் செலுத்துக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் தற்காத்துக்கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை(சிஎம்சி) சார்பில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 98 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. ​​தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 75 முதல் 80 சதவீதம் தொற்று பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அவசியம் எழவில்லை.

இதுபோன்ற தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவுகள் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ஒரு உந்துதலையும், உத்வேகத்தை அளிப்பதுடன், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான தயக்கத்தை அகற்றுவதற்கும், தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கு உதவியாக உள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

மூன்றாவது அலை வருவதும், வராமல் போவதும் நமது கையில் இல்லை. அதனை எதிர்கொள்வதற்கான தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை முறையாக முழுமையாக கடைப்பிடித்தால் நிச்சயம் மூன்றாவது அலை வராமல் தடுக்க முடியும் என்று வி.கே.பால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
3. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில் சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு
கேரள அரசு கொரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.