சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி: இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி + "||" + Shilpa Shetty gets her second dose of covid vaccine

கொரோனா தடுப்பூசி: இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி

கொரோனா தடுப்பூசி: இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர்.  இந்த நிலையில், இன்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இதனிடையே தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள மக்கள் சிலர் அச்சப்பட்டு தவிர்த்து வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போடும் வரையில் 48 சதவீத பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை; கருத்துக்கணிப்பு முடிவு
கொரோனா தடுப்பூசிபோடும் வரையில், 48 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பவில்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2. நாகை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
3. இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி- ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு
கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு செய்தார்.
5. 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்ேகாட்டையில் 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.