மாநில செய்திகள்

துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர் + "||" + Clothing, jewelry and restaurant employees should be vaccinated - Corporation Commissioner

துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர்
துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நாளை மறுநாள் முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவும், துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும்படி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னையில் முக கவசம் அணியாமல் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது” என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.