மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 115 பேர் பலி + "||" + Corona affects 4,013 new people in Tamil Nadu: Another 115 killed

தமிழகத்தில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 115 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 115 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,92,420 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 115 பேர் (அரசு மருத்துவமனை - 93 பேர், தனியார் மருத்துவமனை - 22 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 4,724 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,23,606 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35,881 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 474 பேருக்கும், ஈரோட்டில் 360 பேருக்கும், சேலத்தில் 251 பேருக்கும், திருப்பூரில் 231 பேருக்கும், தஞ்சாவூரில் 232 பேருக்கும், சென்னையில் இன்று மேலும் 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,819 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: இன்று புதிதாக 1,830 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. "தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது" - முதல்-அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி
தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என முதல்-அமைச்சர் ஸ்டாலினை அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் புகந்துள்ளார்.
4. தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது
பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது.
5. "தமிழகத்தில் 95% மாணவர்கள் பள்ளி செல்ல விருப்பம்" - ஆய்வில் தகவல்
தமிழகத்தில் 95% மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராக இருப்பதாக தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.