மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: எடியூரப்பா கடிதம் - துரைமுருகன் பதில் + "||" + Edyurappa's letter - Dhuraimurugan's reply

மேகதாது அணை விவகாரம்: எடியூரப்பா கடிதம் - துரைமுருகன் பதில்

மேகதாது அணை விவகாரம்: எடியூரப்பா கடிதம் - துரைமுருகன் பதில்
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை,

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேச தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரும் 5-ம் தேதி டெல்லி செல்கிறார்.

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளது:

"இந்தத் திட்டம் இரண்டு மாநிலங்களுக்குமே மிகப் பெரிய அளவில் பலனளிக்கும். திட்டத்தை அமல்படுத்துவது தமிழக விவசாயிகளின் நலன்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

இந்நிலையில்  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

மேகதாது அணை தொடர்பான எடியூரப்பாவின் கடிதத்திற்கு உரிய முறையில் பதில் அனுப்பப்படும். மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றார்.