உலக செய்திகள்

இந்தோனேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 27,913 பேருக்கு கொரோனா: 493 பேர் பலி + "||" + Indonesia reports record high of 27,913 COVID-19 cases

இந்தோனேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 27,913 பேருக்கு கொரோனா: 493 பேர் பலி

இந்தோனேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 27,913 பேருக்கு கொரோனா: 493 பேர் பலி
இந்தோனேசியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 27,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில்  கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்தநிலையில்,  இந்தோனேசியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 27,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,56,851ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் இன்று மேலும் 493 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 60,027ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 13,282 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,15,147ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று 34 மாகாணங்களில் பரவியுள்ளது. 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
2. கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
3. புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097-பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 546- பேர் உயிரிழந்துள்ளனர்.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.