தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு + "||" + The sixth session of the seventeenth Lok Sabha that commences on 19th July, will have 19 Business days

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுதோறும் 3 தொடர்கள் நடைபெறுகிறது.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் பலமுறை பாதிக்கப்பட்டு இருந்தன. இதைப்போல இந்த ஆண்டும் 2-வது அலை காரணமாக பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனால் இந்த மாதம் தொடங்க வேண்டிய மழைக்கால கூட்டத்தொடர் குறித்த சந்தேகங்கள் இருந்து வந்தன. எனினும் தற்போது தொற்று சரிந்து வருவதால், இந்த மாதத்தில் அந்த தொடர் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் ஏற்கனவே கூறியிருந்தன.

இது நேற்று அதிகாரபூர்வ முறையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

பதினேழாவது மக்களவையின் ஆறாவது அமர்வு, விடுமுறை நாட்கள் தவிர மொத்தம் 19 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.பி.க்கள் தொகுதி எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் புகார்
2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த மத்தியில் அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
2. கொரோனா 3 வது அலை நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய மந்திரி தகவல்
கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
3. நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க.,காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
4. பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய மந்திரி அறிக்கையை கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது; மக்களவை கடைசியாக மாலை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
5. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
12 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.