தேசிய செய்திகள்

கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து: மேலும் தளர்வுகள் அறிவிப்பு + "||" + Karnataka Chief Minister BS Yediyurappa announces further lockdown relaxation in the state

கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து: மேலும் தளர்வுகள் அறிவிப்பு

கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து: மேலும் தளர்வுகள் அறிவிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மேலும் தளர்வுகள் அளித்து அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2 கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசு ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மேலும் தளர்வுகள் அளித்து அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

புதிய தளர்வுகளின் படி, 

* மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து 05-ம் தேதி முதல் முழு இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அரசு அலுவலங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

* இரவு நேர ஊரடங்கு உத்தரவு தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 5.00 மணி வரை அமலில் இருக்கும். மாறாக வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

* போட்டி பயிற்சி நோக்கங்களுக்காக நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

* திருமண உள்ளிட்ட நிகழ்வுகளில் 100 பேரும், அதேசமயம் இறுதிச்சடங்குகளில் 20 பேரும் பங்கேற்கலாம். 

* வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கிடையாது.

* கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்பன உள்ளிட்ட தளர்வுகள்  அளிக்கப்பட்டுள்ளன.

* புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாள்களுக்கு மாநிலத்தில் அமலில் இருக்கும் என்றும்  தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.