கிரிக்கெட்

சர்வதேச மகளிர் கிரிக்கெட்: அதிக ரன்களை கடந்து மிதாலி ராஜ் சாதனை + "||" + International Women's Cricket: Mithali Raj's record for most runs

சர்வதேச மகளிர் கிரிக்கெட்: அதிக ரன்களை கடந்து மிதாலி ராஜ் சாதனை

சர்வதேச மகளிர் கிரிக்கெட்:  அதிக ரன்களை கடந்து மிதாலி ராஜ் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து நிலைகளிலான சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.


வொர்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி வொர்செஸ்டரில் இன்று நடந்தது.  இதில் ராஜ் 10 ஆயிரத்து 273 ரன்களை கடந்து உள்ளார்.  இங்கிலாந்து முன்னாள் பேட்டிங் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் சாதனையை ராஜ் முறியடித்து உள்ளார்.

ராஜ், மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை கடந்து சாதனை படைத்த பெருமையை கொண்டுள்ளார்.  கடந்த மார்ச்சில் அவர் 7 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார்.

கடந்த மார்ச்சில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டனான மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.  இதேபோன்று எட்வார்ட்சுக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனையும்  ஆவார்.

அனைத்து நிலைகளிலான சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் எட்வார்ட்ஸ் 10,273 ரன்களை எடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 6 மாதங்களில் 1½ லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை
சென்னை விமான நிலைய சரக்ககத்தில் கடந்த 6 மாதத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 420 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக 10 ஆயிரம் ரன்கள் கடந்து ஷிகர் தவான் சாதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார்.
3. நாட்டில் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில் இந்தூர் மாவட்டம் சாதனை
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரே நாளில் சாதனை அளவாக 2 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளனர்.
4. ஐ.பி.எல். போட்டி: 50 அரை சதங்கள் அடித்து டேவிட் வார்னர் சாதனை
ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர், 200 சிக்சர்கள் உள்பட பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
5. ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர்; ஏபி டி வில்லியர்ஸ் சாதனை
ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்து உள்ளார்.