உலக செய்திகள்

ஜப்பானில் நிலச்சரிவு: 2 பேர் பலி; 20 பேர் மாயம் + "||" + Landslide in Japan: 2 killed; 20 people missed

ஜப்பானில் நிலச்சரிவு: 2 பேர் பலி; 20 பேர் மாயம்

ஜப்பானில் நிலச்சரிவு:  2 பேர் பலி; 20 பேர் மாயம்
ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கிய 20 பேர் காணாமல் போயுள்ளனர்.

டோக்கியோ,

ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.  இதில், கடந்த 3 நாட்களாக பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 20 பேர் மாயமாகி உள்ளனர்.  இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்து உள்ளன.

மழை நீரும், மண்ணும் கலந்து சரிந்ததில், ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்தன.  இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதுவரை, 20 பேரை காணவில்லை. மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுவரை 2 உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.  இந்த பேரிடரை எதிர்கொள்ள பிரதமர் யோஷிஹிடே சுகா அதிரடி படை ஒன்றை அனுப்பியுள்ளார்.  போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் நிலச்சரிவு: உயிரிழந்த 52 உடல்களை மீட்டது தேசிய பேரிடர் பொறுப்பு படை
மராட்டியத்தில் கனமழை, நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 52 உடல்களை தேசிய பேரிடர் பொறுப்பு படை மீட்டு உள்ளது.
2. மராட்டியத்தில் நிலச்சரிவு: பலி 44 ஆக உயர்வு; 25 பேரை மீட்கும் பணி தீவிரம்
மராட்டியத்தில் இரு வேறு நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில் நிலச்சரிவு; 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
4. உத்தரகாண்டில் நிலச்சரிவு, வெள்ளம்; ஆற்றில் ஆபத்து நிறைந்த பயணம்
உத்தரகாண்டில் நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே ஆற்றின் வழியே மக்கள் ஆபத்து நிறைந்த பயணம் மேற்கொள்கின்றனர்.
5. நிலச்சரிவு, சுவர்கள் இடிந்தன தானே, பால்கரில் கனமழை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
தானே மாவட்டத்தில் நேற்று கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தது. மழை தொடர வாய்ப்பு இருப்பதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.