கிரிக்கெட்

3வது ஒரு நாள் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி + "||" + 3rd ODI: Indian women's team wins by 4 wickets

3வது ஒரு நாள் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி

3வது ஒரு நாள் போட்டி:  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

வொர்செஸ்டர்,

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய லாரன் (36), பியூமோன்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து விளையாடிய அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் (46), சிவெர் (49) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  அவர்கள் ஆட்டமிழந்த பின்பு சோபியா (28), எமி ஜோன்ஸ் (17) ரன்களில் வெளியேறினர்.  எனினும் அடுத்தடுத்து குறைந்த ரன்களில் வீராங்கனைகள் ஆட்டமிழந்தனர்.  கேத் கிராஸ் (16) ஆட்டமிழக்கவில்லை.

அந்த அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் சேர்த்தது.

இதன்பின் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான செஃபாலி வர்மா (19), மந்தனா (49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  ஜெமிமா 4 ரன்களில் வெளியேறினார்.

ஆனால், இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவர் 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  சர்வதேச அளவிலான சாதனையையும் இந்த போட்டியில் அவர் படைத்துள்ளார்.

ராஜ் 10 ஆயிரத்து 273 ரன்களை கடந்து உள்ளார்.  இங்கிலாந்து முன்னாள் பேட்டிங் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் சாதனையை ராஜ் முறியடித்து உள்ளார்.

இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து நிலைகளிலான சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் (16), தீப்தி (18), ஸ்னேஹ ராணா (24) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  ஜூலன் கோசுவாமி (1) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.  இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட்: 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி
ஜிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றிபெற்றது.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற மகத்தான சாதனையை மிதாலிராஜ் படைத்தார்.
3. மக்களிடம் செல், மக்களோடு சேர்ந்து வாழ்... அண்ணா அறிவுரைப்படி ஆட்சி நடத்துவோம் - மு.க.ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி ஆட்சியை நடத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
5. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.