தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவு இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் + "||" + Union Minister of State for External Affairs 6 days foreign tour

மத்திய வெளியுறவு இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

மத்திய வெளியுறவு இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம்
மத்திய வெளியுறவு துறையின் இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


புதுடெல்லி,

மத்திய வெளியுறவு துறை இணை மந்திரியாக இருப்பவர் வி. முரளீதரன்.  இவர், அடுத்த வாரம் கவுதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய மந்திரி வி. முரளீதரன் வரும் 5ந்தேதி முதல் 10ந்தேதி வரை 6 நாட்கள் கவுதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் ஆகிய இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வெளியுறவு இணை மந்திரியாக இந்த நாடுகளுக்கு முரளீதரன் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இந்த பயணத்தின் போது, அந்த நாடுகளின் தலைவா்கள், வெளியுறவு மந்திரிகளை சந்திக்கும் முரளீதரன், இரு நாடுகளிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்புடைய ஆலோசனைகளை நடத்த உள்ளார் என்று தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜி20 மந்திரிகள் மாநாடு: மத்திய மந்திரி ஜெயசங்கர் இத்தாலி பயணம்
கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெயசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
2. 18 ஆண்டுகளுக்கு பின் கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி சுற்றுப்பயணம்
18 ஆண்டுகளுக்கு பின் கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
3. ரஷ்ய வெளியுறவு மந்திரி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் வருகிற திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
4. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறார். 4 நாட்களில் 21 இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
5. நாளை முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை வைகோ தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.