தேசிய செய்திகள்

ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை- காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + France Inquiry Into Rafale Deal Revives Political Controversy In India

ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை- காங்கிரஸ் வலியுறுத்தல்

ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை-  காங்கிரஸ் வலியுறுத்தல்
ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது
புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே புகார் கூறி வருகிறது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு கிளம்பி இருந்தது. தற்போது இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு பிரெஞ்சு அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்துடன் தொடர்புடையது என்பதால், ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் இதற்கு ஒரே வழி என்று கூறிய சுர்ஜேவாலா, இதில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வத்திராயிருப்பு ஒன்றியம் போன்ற பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது.
2. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டிகள் போராட்டம் நடைபெறுகிறது.
3. புதுச்சேரி திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு
புதுச்சேரி திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
4. எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு: ஜோதிமணி டுவிட்
எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது ராகுல் காந்தி
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.