தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 43,071-பேருக்கு கொரோனா தொற்று + "||" + India Records 43,071 New Covid Cases In 24 Hours, 955 Deaths

இந்தியாவில் மேலும் 43,071-பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் மேலும் 43,071-பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இப்போது தினந்தோறும் வீழ்ந்து கொண்டிருக்கிறது.
கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது. 

தினசரி தொற்று பாதிப்பும் மீண்டும் சரிவுப்பாதையில் செல்கிறது. நேற்று முன்தினம் 46 ஆயிரத்து 617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இது நேற்று மேலும் சரிந்து 44 ஆயிரத்து 111 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், இன்று மேலும் சரிந்து ஒருநாள் பாதிப்பு  43,071- பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 தொற்று பாதிப்பு நேற்றை விட 2 சதவீதம் இன்று குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 52,299- பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 350- ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 955- பேர் உயிரிழந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் திரையரங்குகள் மற்றும் மது பார்களை திறக்க அனுமதி
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: கமிஷனர் கிரிஷா
திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என கமிஷனர் கிரிஷா தெரிவித்துள்ளார்.