உலக செய்திகள்

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விழுந்து விபத்து- 17 பேர் பலி + "||" + Military Plane In Philippines Carrying 85 People Crashes: Army Chief

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விழுந்து விபத்து- 17 பேர் பலி

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விழுந்து விபத்து- 17 பேர் பலி
பிலிப்பைன்சில் 92-பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மணிலா,

பிலிப்பைன்சில் 92-பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் தரையிறங்க முயற்சிக்கும் போது  சி-130 ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறியதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை உயிருடன் மீட்டு விடலாம் என்ற பிரார்த்தனையுடன் முழு வீச்சில் மீட்பு பணியில், மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அடிப்படை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. பயங்கரவாத தடுப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  இதற்கிடையே, இந்த விபத்தில் 17- பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.