மாநில செய்திகள்

பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் - அமைச்சர் நாசர் தகவல் + "||" + Rs 270 crore loss to TN govt due to reduction in milk prices Minister Nasar

பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் - அமைச்சர் நாசர் தகவல்

பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் - அமைச்சர் நாசர் தகவல்
பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை மையங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, சேலம் ஆவின் பால் பண்ணையிலும் ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், தற்போது ஆவின் நிலையத்திற்கு பால்வரத்து 1.5 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதேபோல பால் விற்பனையும் 1.5 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், பால்விலை குறைப்பால் அரசுக்கு 270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் கடந்த ஆட்சியில் 234 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் நாசர், கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டற்கான ஆதாரம் உள்ளது என்றும் விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி
அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
2. மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்க்கிறது - மந்திரி கோவிந்த் கார்ஜோள்
மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்ப்பதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
3. அங்கன்வாடி மையங்களில் வரும் 1-ம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு
அங்கன்வாடி மையங்களில் வரும் 1 ஆம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. தமிழக அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
5. ஆன்லைன் ரம்மி தடைக்கு தமிழக அரசு 6 மாதத்தில் சட்டம் இயற்றும் என நம்புகிறோம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
ஆன்லைன் ரம்மி தடைக்கு 6 மாதங்களுக்குள் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நம்புவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.