மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது + "||" + TN lockdown: Bus services to restart from july 5with 50% occupancy

தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது
அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால், பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

இதன்படி மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இதன்பிறகு கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை முதல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கியுள்ளது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் நாளை முழு அளவில் பேருந்து சேவை தொடங்கவுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து தொடங்கும் நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளில் மட் டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை குளிர்சாதன வசதியின்றி இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.
4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.