மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; "உடற் கூறாய்விற்கு பிறகே காரணம் தெரியும்" - சுகாதாரத்துறை + "||" + madurai Vaccinated Youth death

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; "உடற் கூறாய்விற்கு பிறகே காரணம் தெரியும்" - சுகாதாரத்துறை

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; "உடற் கூறாய்விற்கு பிறகே காரணம் தெரியும்" - சுகாதாரத்துறை
மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுதினமே 29 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மதுரை,

மதுரை புது விளாங்குடியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ சைமன். மென்பொருள் பொறியாளரான இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்று,  சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவர்களுக்கு கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது. 

தடுப்பூசி செலுத்திக்கொண்டு கண்காணிப்பில் இருந்தபோது எந்த உடல் உபாதைகளும் ஏர்படாததால், ஆண்ட்ரூ சைமன் வீடு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், நேற்று காலை கழிப்பறைக்கு சென்ற ஆண்ட்ரூ சைமனுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ஆண்ட்ரூ சைமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த ஆண்ட்ரூ சைமனுக்கு கடந்த 6 மாதங்களாக நீரிழிவு நோய் இருந்த நிலையில், அதற்காக அவர் சிகிச்சை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் அவருக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கமும் இல்லையென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உடற் கூறாய்வு முடிந்த பின்னரே ஆண்ட்ரூ சைமன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவருமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.