மாநில செய்திகள்

சென்னையில் 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் வைப்பு + "||" + Seal deposit for 22 Avin milk stations in Chennai

சென்னையில் 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் வைப்பு

சென்னையில் 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் வைப்பு
சென்னையில் 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளாதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சேலம் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டன.

அதற்கு ஒரு தொகையும் இதுவரை வரவில்லை. ஆதாரத்துடன் எங்களிடம் உள்ளது. அதன்மேல் நடவடிக்கை எடுப்போம், விடமாட்டோம்.

இங்கிருந்து போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை. வெளியே போனதற்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் இந்த ஆட்சியில் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை

இவ்வாறு அவர் கூறினார்.