மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: மேலும் 72 பேர் பலி + "||" + Less than 4,000 corona infections in Tamil Nadu: Another 72 killed

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: மேலும் 72 பேர் பலி

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: மேலும் 72 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,96,287 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 72 பேர் (அரசு மருத்துவமனை - 54 பேர், தனியார் மருத்துவமனை - 18 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 4,382 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,27,988 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35,294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 445 பேருக்கும், ஈரோட்டில் 349 பேருக்கும், சேலத்தில் 245 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், திருப்பூரில் 225 பேருக்கும், சென்னையில் இன்று மேலும் 222 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சமாக உயர்வு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 128 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்
போல் வால்ட் பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்
4. ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா ; டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேர் பாதிப்பு
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் அதிகரித்து வரும் கொரோனா பதிப்பு ஒரே நாளில் 3,177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 640-பேர் உயிரிழந்துள்ளனர்.