மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன் + "||" + Minister Duraimurugan goes to Delhi

மேகதாது அணை விவகாரம்: டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம்: டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்கிறார்.
சென்னை,

காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்கிறார்.

டெல்லி செல்லும அவர் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவ்த்தை நாளை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசானை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. 

மத்திய மந்திரியுடனான பேச்சுவார்த்தையில் மேகதாது அணை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கேரளம், ஆந்திர மாநிலங்களுடன் நதிநீர் விவகாரங்களும் ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.