உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்து: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு + "||" + Philippine Military Plane Crashes With 96 People Aboard

பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்து: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்து: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பிலிப்பைன்சின் ராணுவ விமான விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96-பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்திருந்தார். 

தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானம் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.