தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் டிரோன்கள் பறக்க தடை + "||" + J&K drone attack fallout: Drones, unmanned vehicles banned in Srinagar

ஸ்ரீநகரில் டிரோன்கள் பறக்க தடை

ஸ்ரீநகரில் டிரோன்கள் பறக்க தடை
ஸ்ரீநகரில் டிரோன்கள் பறக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு விமானப்படை தளத்தில் கடந்த வாரம் டிரோன்கள் வாயிலாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக, ஸ்ரீநகரில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா குட்டி விமானம் பறக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ராணுவ மையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த தடையை விதிப்பதாக ஸ்ரீநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்காக டிரோன்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரோன் கேமராக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை உள்ளூர் காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.