தேசிய செய்திகள்

மல்யுத்தம் குறித்த புதிய தகவல்கள் பெற எனக்கு டிவி வேண்டும் - சிறை அதிகாரிகளுக்கு சுஷில்குமார் கடிதம் + "||" + Sushil Kumar seeks TV in Tihar jail: Tainted wrestler wants to remain updated about wrestling matches

மல்யுத்தம் குறித்த புதிய தகவல்கள் பெற எனக்கு டிவி வேண்டும் - சிறை அதிகாரிகளுக்கு சுஷில்குமார் கடிதம்

மல்யுத்தம் குறித்த புதிய தகவல்கள் பெற எனக்கு டிவி வேண்டும் - சிறை அதிகாரிகளுக்கு சுஷில்குமார் கடிதம்
கொலை வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் டிவி வேண்டி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் விளையாட்டு மைதானத்தில்  மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் சாகர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை மே 23 ஆம் தேதியன்று கைது செய்தனர்.பின்னர்,இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றம் குமாரின் நீதிமன்றக் காவலை ஜூன் 25 வரை நீட்டித்தது.

பின்னர்,டெல்லி காவல்துறையினர் சுஷில் குமாரை மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு அனுப்பினர்.

இந்நிலையில்,சுஷில் குமார் சிறையில் தனக்கு டிவி வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:”எனக்கு டிவி கிடைத்தால், மல்யுத்தம் குறித்த புதிய செய்திகள் கிடைக்கும் “,என்று தெரிவித்துள்ளார்.

சுஷில் குமார் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், தனது கட்டுமஸ்தான உடலை பராமரிக்க சிறைச்சாலையில் சிறப்பு உணவு வகைகளை வழங்குமாறு அவர் வைத்த கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.