தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: அரியானாவில் ஜூலை 12-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Haryana extends COVID-19 lockdown till July 12

கொரோனா பரவல்: அரியானாவில் ஜூலை 12-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவல்: அரியானாவில் ஜூலை 12-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர், 

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த மாநிலங்கள், தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியதை தொடர்ந்து, படிப்படியாக தளர்வுகளை அளிக்க தொடங்கி உள்ளன. அந்தவகையில் அரியானாவிலும் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதாவது ஜூலை 12-அம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் உள்பட அனைத்து கடைகளையும் திறக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வழிகாட்டுதல்கள்படி, பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ) ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரை அதன் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்படும் என்று புதிய உத்தரவில் அரியனா அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தால் ஹிசாரில் நடைபெற உள்ள பொது நுழைவுத் தேர்வும் (சி.இ.இ) அனுமதிக்கப்படும்.  கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு மேலதிகமாக, விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியாக்கள் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு திறக்க அரசாங்கம் தற்போது அனுமதித்துள்ளது. இருப்பினும், பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக 19 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. 20 பேருக்கு கொரோனா தொற்று
20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. 21 பேருக்கு புதிதாக கொரோனா
மதுரையில் 21 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு 3 பேர் பலி.