மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின்: சென்னை ஐகோர்ட் + "||" + Sivasankar Baba's devotees get conditional bail for 5 persons: Chennai highCourt

சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின்: சென்னை ஐகோர்ட்

சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின்: சென்னை ஐகோர்ட்
சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார். 

இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா மற்றும் பாரதி ஆகியோர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 2 வாரங்களுக்கு ஐந்து பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்துயிட வேண்டும் என்றும், தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்: சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு
செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் கோர்ட்டு காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
2. சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் 2-வது குற்றப்பத்திரிகை தயார்
சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணை அதிகாரி குணவர்மன் திடீரென்று மாற்றப்பட்டார். அந்த வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது.
3. சிவசங்கர் பாபா, மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை; சிபிசிஐடி விசாரணையில் தகவல்
சிவசங்கர் பாபா, மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
4. சிவசங்கர்பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
5. கேளம்பாக்கம் பள்ளிக்கும், தனக்கும் தொடர்பில்லை-சிவசங்கர் பாபா
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஜாமீன் மனுவில் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.