மாநில செய்திகள்

புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன + "||" + 1.08 lakh Covishield vaccines arrived in Chennai today from Pune

புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மூன்றாம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை தமிழகத்திற்கு 1 கோடியே 57 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் இலவச தொகுப்பில், புனேவில் இருந்து 9 பெட்டிகளில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன. 

இந்த தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மாநில சுகாதாரத்துறை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கும் இந்த தடுப்பூசிகள் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதல் பேட்டிங்
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. டெல்லியில் இருந்து தமிழகம் வந்த புதிய கவர்னர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
டெல்லியில் இருந்து சென்னை வந்த புதிய கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
3. சென்னையில் வருகிற 29 முதல் மாநில நீச்சல் போட்டி
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 37-வது சப்-ஜூனியர் மற்றும் 47-வது ஜூனியர் பிரிவினருக்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) நீச்சல் வளாகத்தில் வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது.
4. புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை
புனேவில் இருந்து கூடுதலாக 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.
5. புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.