தேசிய செய்திகள்

தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் - மல்லிகார்ஜுன கார்கே + "||" + Cabinet expansion being done to distract people, says Congress MP Kharge

தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் - மல்லிகார்ஜுன கார்கே

தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் - மல்லிகார்ஜுன கார்கே
தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரிசபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று மாலை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான 43 புதிய மத்திய மந்திரிகளின் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டது. புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.  

இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலைக் காரணமாகவே மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த புதிய மந்திரிசபையில், பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பான்மையாக மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது, தேர்தலை மனதில் கொண்டே இதனை மத்திய அரசு செய்துள்ளது. இது மக்களை திசைதிருப்பும் முயற்சி. இவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் நன்மையை செய்துவிடப் போவதில்லை” என்று அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு
2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
2. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. சென்னை: பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியையொட்டி கோடம்பாக்கம் முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியையொட்டி கோடம்பாக்கம் முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை முறையில் அமல்.
5. சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.