மாநில செய்திகள்

ஜூலை 07: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + July 07: Full status of corona damage in Tamil Nadu by district

ஜூலை 07: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

ஜூலை 07: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25,06,848 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 24,39,576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,704 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 64 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,196 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மேலும் 385 பேருக்கும், ஈரோட்டில் 288 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,34,037 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 8,238 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,39,41,304 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,51,844 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,30,89,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,50,609 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 34,076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,65,101 பேர் ஆண்கள் (இன்று-1,950 பேர்), 10,41,709 பேர் பெண்கள் (இன்று-1,417 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-






















தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம்
தேசிய ஓபன் தடகள போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம் கிடைத்தது.
2. தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
3. விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
4. வருவாய்ப் பற்றாக்குறை நிதி: தமிழகத்துக்கு 6-வது தவணையாக ரூ.183.67 கோடி விடுவிப்பு
தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு 6 வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய நிதி அமைச்சகம் இன்று விடுவித்துள்ளது.
5. 12-ந் தேதி தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.