உலக செய்திகள்

ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழை: 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் + "||" + Heavy rainfall alert in 3 Kyushu prefectures

ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழை: 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழை: 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் காரணமாக, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கியூஷூ, 

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ககோஷிமா, மியாசாகி குமாமோட்டோ ஆகிய 3 மாகாணங்களிலும் இடைவிடாது பேய் மழை கொட்டி வருகிறது. 

இதன் காரணமாக பெரும் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் 3 மாகாணங்களையும் சேர்ந்த 3 லட்சத்து 65 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும் அந்த மூன்று மாகாணங்களில் உள்ள 1,20,000 வீடுகளை இப்பகுதியில் கனமழை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசு நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

தற்போது கியூஷூ மாகாணங்களின் பல ஆறுகளில் நீர் நிலைகள் ஆபத்தான அளவில் உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ககோஷிமாவில் ஒரு நதி ஏற்கனவே வெள்ள அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
2. ஜவ்வாது மலையில் கனமழை - பீமன் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஜவ்வாது மலையில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.
3. கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்
கொல்கத்தாவில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
4. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.