உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதி + "||" + Corona emerging again in China 29 new cases confirmed

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 27 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 22 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,095 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.84 கோடியாக உயர்ந்துள்ளது.
2. கர்நாடகத்தில் நேற்று 1,050 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,306 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
4. நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை - ஐதராபாத் பயிற்சியாளர் கருத்து
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.
5. ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.