தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் + "||" + Mamata Banerjee letter to PM Modi demanding increase in corona vaccine supply

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. மத்திய அரசு தொகுப்பில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 2.12 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 18 லட்சம் தடுப்பூசிகளை மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்துள்ளதாகவும் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதத்திற்கான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடித்தத்தில், மத்திய அரசு தொகுப்பில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்காக ஜூலை மாதத்திற்கு 73 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 25 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மாநிலத்தில் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் செலுத்த மேலும் 11.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுவரை மேற்கு வங்கத்தில் 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி சீராக நடைபெற வேண்டுமானால் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.
3. மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
4. 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5. கரூரில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 624 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.