தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு + "||" + General Bipin Rawat inspects Kashmir Line of Control

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் அத்துமீறிய தாக்குதல்கள், ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் விநியோகிப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், நேற்று எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். குறிப்பாக காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்குச் சென்று அங்கு ராணுவத்தின் செயல்பாட்டு தயாா் நிலைகள், ஜம்மு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை, ஊடுருவல் எதிா்ப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவத்தின் களத் தளபதிகளை சந்தித்து பிபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு செல்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் - சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பின்னர் மேற்கொள்ளும் முதல் பயணம்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக நாளை ஜம்மு செல்கிறார்.
2. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் பிடிபட்டார்...
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியரை எல்லைப்பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.
3. காஷ்மீர்: எல்லை பகுதியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் - பாதுகாப்பு படை நடவடிக்கை
காஷ்மீரில் சர்வதேச எல்லைபகுதியில் துப்பாக்கிகள், தோட்டக்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
4. காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் பலி
காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீருக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி
காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.