உலக செய்திகள்

கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு + "||" + France decided to allow passengers who took Covishield vaccine

கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு

கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு
கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சா்வதேசப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பிரான்ஸ் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பாரிஸ்,

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை, இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த தடுப்பூசி, பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோா் செலுத்தியிருக்க வேண்டிய கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பெயர் அதில் இடம்பெறாததால், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்திய அரசு சார்பில் இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களையும் அனுமதிக்க பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் சம்மதித்த நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டு அரசும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமத்திக்க முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஸ்ட்ரா செனகாவால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதே நேரம், டெல்டா வகைக் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளில் சோதனைகள் கடுமையாக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம்: காய்ச்சல் பாதித்த 3 குழந்தைகள் உயிரிழப்பு; 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்காளத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
2. டெல்லியில் நடந்ததுபோல் பயங்கரம் மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிப்பு
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவத்தைப்போல, மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்: தமிழக அரசு விளக்கம்!
வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
4. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
5. முக கவசம், கையுறை அணிந்துவர வேண்டும்: சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதி
கல்லூரி திறப்புக்கான உயர்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதில் சுழற்சி முறையில் 50 சதவீதம் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்கள் கையுறை, முக கவசம் அணிந்துவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.