தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்'பாகுபலி'-பிரதமர் மோடி + "||" + We want Parliament to hold healthy discussion on Covid - PM Modi

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்'பாகுபலி'-பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்'பாகுபலி'-பிரதமர் மோடி
கொரோனா காலத்தில் தேவையான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
புதுடெல்லி, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் தேதி முடிகிறது. இந்த சூழலில் காலை 11 மணிக்கு தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடரில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் கொரோனா காலத்தில் தேவையான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் குடை பிடித்தபடி பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் தேவையான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கான பதிலை வழங்க தயாராக இருக்கிறோம். அனைத்து எம்.பி.க்களிடமிருந்தும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை எதிர்பார்க்கிறோம். 

இதனால் கொரோனா மற்றும் குறைபாடுகளை சரிசெய்ய ஒரு புதிய அணுகுமுறை கிடைக்கும், இதனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றாக முன்னேற வேண்டும். அனைவருக்கும் 

தடுப்பூசி என்கின்ற “பாகு” (ஆயுதங்கள்) கொடுக்கப்படுகிறது, அதை எடுத்துக்கொள்பவர்கள் “பாகுபலி” ஆகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மக்கள் 'பாகுபலி' ஆகிவிட்டனர்.

தொற்றுநோய் உலகம் முழுவதுக்கும் அச்சுருத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது குறித்து நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதங்களை நாங்கள் விரும்புகிறோம். இது ஜனநாயகத்தை உயர்த்தும், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மற்றும் வளர்ச்சியின் வேகத்தை மேம்படுத்தும்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுகின்றன எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
2. ‘நீட்’ தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
‘நீட்’ தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? என்பது குறித்து மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
3. தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளன மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில்
தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
4. கருணாநிதி நூலகம்; ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், மாற்ற தயார்-செல்லூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்
மதுரையில் கருணாநிதி பெயரில் கட்டப்படும் நூலகத்திற்கான இடத்தில் பென்னிகுவிக் வசித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அதை மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக இருப்பதாக செல்லூர் ராஜூக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
5. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்.