மாநில செய்திகள்

பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு! + "||" + Sexual harassment: Case against teacher Rajagopal for repealing thuggery law!

பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு!

பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு!
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, 

சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆன்லைன் வகுப்பில் வரம்பு மீறி நடந்துகொண்டது போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட எஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த ஜூன் 25ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்தநிலையில் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சுதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2015 ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் அளித்துள்ளார். ஆனால் அப்போது ஆன்லைன் வகுப்புகள் நடக்கவில்லை. தாமதமாக அளிக்கப்பட்ட புகார் மற்றும் செவிவழி தகவலின் அடிப்படையில் அவர் மீது குண்டாஸ் போடப்பட்டது சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சுதாவின் மனு மீது, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
3. பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. பாலியல் புகாரில் மூன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த சாமியார் கைது
பாலியல் புகாரில் மூன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த சாமியார் பாபா சச்சிதானந்தா கைது செய்யப்பட்டு உள்ளார்.
5. பாலியல் புகாரில் கைது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி மனு தாக்கல்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.