தேசிய செய்திகள்

விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்த ஜெஃப் பெசோஸ் + "||" + Jeff Bezos, World's Richest Man, Travels To Space In His Own Rocket

விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்த ஜெஃப் பெசோஸ்

விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்த ஜெஃப் பெசோஸ்
விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் வானில் மிதக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் வானில் மிதக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

'அமேசான்' நிறுவனரும், செயல் தலைவருமான ஜெப் பெசாஸ், பொது மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா திட்டத்துக்காக 'புளூ ஆரிஜின்' என்ற நிறுவனத்தை 2000ல் துவக்கினார். அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட வீரரான ஆலன் ஷெப்பர்டு நினைவாக, 'நியூ ஷெப்பர்டு' என்ற ராக்கெட்டை இந்நிறுவனம் உருவாக்கியது. 

நிலவில் மனிதன் சென்று வந்ததன் 52-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று மாலை நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

அதன்படி, அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க்பெசோஸ், 82 வயதான மூதாட்டி வாலிஃபங்க் உள்பட 4 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 11 நிமிடங்கள் விண்ணில் இருந்த பிறகு பாராஷீட் வாயிலாக நான்கு பேரும் பூமிக்குத் திரும்பினர்.
முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய ஜெப் பெசாஸ், ''இது வாழ்வின் மிக சிறந்த நாள்,'' என, மகிழ்ச்சியை தெரிவித்தார்.