உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு + "||" + US coronavirus cases rise, fueling fears of resurgence

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை 3.50 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது.  

 கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சமீப காலமாக அமெரிக்காவில் தொற்று பரவல் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. 

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 220- பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளிலேயே தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 33.8 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 33.8 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 11% ஆக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,931- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் 33.7 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 33.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு: கேரளாவில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்வு
கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் தொற்று பாதிப்பால் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.