பிற விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்: ஐ.ஒ.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + Brisbane confirmed as hosts for 2032 Olympics

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்: ஐ.ஒ.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்: ஐ.ஒ.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டோக்கியோ, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை மறுநாள் (23ஆம் தேதி) ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் ஜப்பான் வந்துள்ளனர்.

வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 339 பதக்கங்கள் வழங்கப்படும். இதில் உலகம் முழுவதுமிருந்து 11,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் 

இந்நிலையில் 2032ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், 2028-ம் ஆண்டிற்கான போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்’; ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.
2. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
ஒலிம்பிக் போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது பற்றியும் ஜப்பான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3. கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
கனடா, ஆஸ்திரேலியாவில் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பபட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்து சேர்ந்தன.
4. ஐபிஎல் முடிந்த பிறகு வீரர்களுக்காக தனி விமானம் இயக்க வேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் வேண்டுகோள்
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ் லின் அறிவுறுத்தியுள்ளார்.
5. இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க ஆஸ்திரேலியா முடிவு
இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது இன்று ஆஸ்திரேலியா முடிவு செய்கிறது.