தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் 70 சதவிகிதம் ஆக்சிஜன் ஏற்றுமதி - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு + "||" + Centre increased oxygen exports by 700 pc during COVID: Priyanka Gandhi

கொரோனா காலத்தில் 70 சதவிகிதம் ஆக்சிஜன் ஏற்றுமதி - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் 70 சதவிகிதம் ஆக்சிஜன் ஏற்றுமதி - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 70 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே பலி எண்ணிக்கை உயர்ந்ததாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை, இது குறித்த தரவுகள் யாவும் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரேதச அரசுகள் வழங்கியவை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆக்சிஜன் பற்றாக்குறை யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய கூறுகிறது. ஆனால், கொரோனா 2 வது அலையில்  ஆக்சிஜன் ஏற்றுமதி 70 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் விளைவாகவே உயிரிழப்பு நிகழ்ந்தது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை ஏற்படுத்த எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்த செல்ல டாங்கர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றார்.